Friday, January 26, 2018

  சிறக்கட்டும் ! தோழர் கோட்டியப்பனின் பணி ஓய்வுக் காலம் !
                  அறுபதிலும் இளமையாக தோற்றமளிக்கும் 
 வீரமிகு நெல்லை கோவையின்  மாண்பில்  சங்கமித்தது !
              

                                             
அன்றும் இன்றும் 
 

        எனது சமகால  இயக்கப் போராளி.  எனது அனைத்து தொழிற்சங்க  பணிகளிலும்  உறுதுணையாக இருந்தவர். 

1983 லிருந்து கோவை   மாவட்டச்  சங்கத்தின் முக்கியமான தூண்களில் ஒருவராக இருப்பவர்.

1980களில்   அவர்   பணியாற்றிய பொது மேலாளர் அலுவலகத்தில் எதிர் அணி ஆகப்பெரும்பான்மை. 
இவரும் மூத்த தோழருமான மாசாணன் மட்டுமே 
நமது அணி. பெரும் எதிர்ப்புகளை அஞ்சாநெஞ்சத்தோடு  எதிர்கொண்டு சங்கத்தை   வலுவாக  கட்டியவர்.   பொது மேலாளர்  அலுவலகத்திற்கு யார் வந்தாலும் முதலில் சந்திப்பது  தோழர்  கோட்டியப்பனாகத்தான் இருக்கும்.
எந்த பிரச்னையையும் தீர்க்கும் வல்லமை அவரிடம்
 இருந்தது. 

வாழ்க்கைத்துணையாக அஞ்சல் துறையில் பணியாற்றும் தோழியரை ஏற்று மனநிறைவான வாழ்க்கை வாழ்பவர்.

கர்ண பரம்பரை. கலை இலக்கிய பெருமன்றம், இந்தோ- சோவியத் நட்புறவுக் கழகம், இஸ்கப் என்று அனைத்திலும் தீவிர செயல்பாட்டாளர்.

தனது சொந்த செலவில் ருஷ்யா சென்று யுகப்புரட்சியின் நாயகர் லெனின் அவர்களின் பூத உடலை அருகில் சென்று  தொட்டுணர்ந்த அரிய வாய்ப்பை கிடைக்கப் பெற்றவர்.

அவரது பணி ஒய்வுக் காலம் அர்த்தமுள்ளதாய் அமையும் 
என்பதில் சந்தேகமில்லை.

 பணி ஓய்வுக்கு பி,ன்  நமது நிறுவனத்தில் மிகுந்த சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களின் 
நலன் காக்க செயலாற்ற உள்ளார்.

அவரது பணி நிறைவுக் காலம் சிறப்புடன் அமைய மாவட்டச் சங்கத்தின் தோழமைமிகு  வாழ்த்துக்கள்.

      

No comments:

Post a Comment