Saturday, September 23, 2017

நமது மாவட்டத்தில் விசிஷ்ட் சஞ்சார் சேவா பதக் பெற்ற 

எனது அருமை நண்பர் அல்போன்ஸ் அவர்களை சந்தித்து 

வாழ்த்து தெரிவித்தேன் .

Image may contain: 2 people, people smiling, people standing

Thursday, September 21, 2017

                            Image result for first step

This is only the first step.........

       It is reported that management committee of BSNL Board approved  the proposal of 3rd pay revision with full 15% fitment w.e.f. 01-01-2017. 

The IDA will be neutralized as on 31-12-2016. The proposal will be now placed before the remuneration committee of BSNL board headed by an external 
Director before sending to the BSNL Board.

Monday, September 18, 2017

                                     
                                                     செப்டம்பர் 19 தியாகிகள் தினம். 


மத்திய அரசு ஊழியர்கள் இயக்க வரலாற்றில் எவராலும் மறக்க

இயலாத நாள். 

மத்திய அரசு 3 ஆம் ஊதிய குழுவை அமைத்த போது அதன் 

செயல்பாட்டு வரைமுறை குறிப்பில் " தேவைக்கேற்ற 

குறைந்தபட்ச ஊதியத்தை " சேர்க்க மறுத்தது. ஆகவே, 

தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், பஞ்சபடியை 

அடிப்படை சம்பளத்துடன் இணைத்தல் , பஞ்சப்படி 

வழங்குவதற்கான விதிமுறைகளை முதலிய 9 அம்ச 

கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

நடைபெற்றது. 

அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. அரசின் 

திமிர்த்தனமும், ஊழியர்களை துச்சமென மதிக்கும் போக்கும் 

ஊழியர்களை மேலும் கொதிப்படைய செய்தது.

வேலை நிறுத்தம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. 

துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். 

10,000 மேற்பட்டோர் suspend செய்யப்பட்டனர். 

3,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 

8,000 பேர் கைது செய்யப்பட்டனர். 

Casual .ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். 

மேலும் சேவை முறிவு, தொலைதூர இட மாற்றம் , பதவி 

இறக்கம் முதலான நடவடிக்கைகள் தொடர்ந்தன.


அன்றைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தலைவரும்

 நாடாளுமன்ற உறுப்பினருமான நாத்பாய் அவர்களின் கண்டன 

உரை நாடாளுமன்றத்தை உலுக்கியது. 

அவரது உரையின் சில பகுதிகள் :
" வேலை நிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிர் நீத்த

 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்த வேலை 

நிறுத்தம் அரசியல் பின்னணி கொண்டது என்று கூறுகிறார்கள். 

எது அரசியல் பின்னணி ? ஒரு ஊழியன் தனது சாப்பாட்டுக்கு

 தேவையான 14 அவுன்ஸ் தானியம், 3 அவுன்ஸ் பருப்பு, சிறிது 

காய்கறி, கொஞ்சம் பால், இவற்றை வாங்கிட தேவையான 

சம்பளம் கேட்கிறான் . வருடத்துக்கு 12 மீட்டர் (குறைந்த பட்சம்) 

வேண்டும் என்கிறான். இதை பூர்த்தி செய்யும் கூலி தான் 

தேவை அடிப்படையிலான குறைந்த பட்ச ஊதியம் என்பது.

 இது அதிகம் என்று யாராலும் கூற முடியுமா ? இதில் அரசியல் 

நோக்கம் எப்படி வரும் ? புதிய பாரதம் பிறந்த தினத்தன்று 

சுதந்திர தினத்தில் ராவி நதிக் கரையில் மூவர்ண கொடியினை 

பறக்க விட்டு நாட்டு மக்களுக்கு நாம் கூறிய உறுதி மொழி 

இது தானே ? இதை கூட நிறைவேற்ற இந்திய அரசால் முடியாதா ...

 1957 இந்திய தொழிலாளர் மாநாடு தேவை அடிப்படையிலான 

குறைந்த பட்ச ஊதியத்தை பரிந்துரை செய்தது. இதே கோரிக்கை 

தான் 1960 வேல நிறுத்த போராட்டத்தின் போதும் வலியுறுத்தப்

பட்டது. மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி 

போராடுகிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள்.

 
அடக்கு முறையினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மத்திய 

அரசு ஊழியர்களுக்கு தோல்வி இல்லை. வாக்குறுதியை நிறை

வேற்ற முடியாத அரசுக்குத்தான் தோல்வி இது. " 

நாத்பாயின் குரல் இன்றைக்கும் மத்திய அரசு ஊழியர் இயக்கங்களில்

 ஒலித்துக் கொண்டிருக்கிறது.


அடக்குமுறையினால் வேலைநிறுத்தங்கள் தோல்வியுற்றது 

போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் அவைகள் தற்காலிகமானதே. 

தொழிற்சங்கங்கள் தோற்றதாக வரலாறு இல்லை. தியாகங்கள் 

வீணானதாக வரலாறும் இல்லை. 


செப்டம்பர் -19- 1968 தியாகிகளுக்கு வீர வணக்கம் !

Thursday, September 14, 2017

                        BSNL நிறுவனத்தை இருகூறாக்கி 
           தனி  டவர்  கம்பெனியை அமைக்கும் 
     மத்திய அமைச்சரவையின்  நாசகர   முடிவை 
            கைவிடக் கோரி அனைத்து சங்க 
                   கண்டன ஆர்பாட்டம் 

15-9-17  காலை 1100 மணிக்கு  :   
 மெயின் தொலைபேசி நிலையம், கோவை - 18

 மதியம் 13.30 : PGM  அலுவலகம்   கோவை-43.

          அனைவரும் திரளாக பங்கேற்பீற்பீர் 

Wednesday, September 13, 2017

                 வருந்துகிறோம் !
1994லிருந்து கடைசிவரை நமது மாவட்டச் சங்கத்தோடு நல்லுறவு 
பேணிவந்த SEWA BSNL மாநிலச் செயலர் தோழர் T. முத்துகிருஷ்ணன் 
அவர்களின் எதிர்பாராத மறைவு நமது தோழர்களை ஆழ்ந்த  துக்கத்தில் 
ஆழ்த்தியுள்ளது.
தோழர் P.N. பெருமாள் அவர்களின் வேண்டுகோளைப் பார்த்தவுடன் 
அவரது மனைவியிடம் எனது உதவித்தொகையை மருத்துவ நிதிக்கு 
வழங்கினேன். இன்று எங்களது அலுவலகத்தில் நிதி திரட்ட திட்டமிட்டிருந்த சூழ்நிலையில் இன்று காலை அவர் மறைவுச் செய்தி மிகுந்த ஏமாற்றத்தை 
அளித்தது.
வரது குடும்பத்தாருக்கும் சகோதரர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.



2008 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தோழர் முத்துகிருஷ்னன்

1994 மாவட்ட மாநாட்டில் தோழர் முத்துகிருஷ்ணன்

Saturday, September 9, 2017

திரு .திருநாவுக்கரசர் அவர்களுக்கு பாராட்டு ! 

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில கமிட்டி தலைவர் 
திரு திருநாவுக்கரசு அவர்கள்,  BSNL  CSC க்களை தனியாருக்கு  
தாரை வார்ப்பதை கண்டித்து அறிக்கை விட்டதை ஒட்டி அவரை 
சந்தித்து நமது சங்கத்தின் சார்பாக பாராட்டு தெரிவித்து உள்ளார் 
தோழர் C.K..மதிவாணன்  அவர்கள்.  


Monday, September 4, 2017


தன் குழந்தையை பட்டினி போட்டுவிட்டு ஊரான்        குழந்தையை  ஊட்டி வளர்க்கும் மோடி அரசு.
மத்திய அரசில் உள்ள உயரதிகாரிகளுக்கு ரூ 60,000 மதிப்புள்ள 
உயர்தர செல்போன்களை வழங்கியுள்ள மோடி அரசு அதில் 
பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை வழங்கி 
உள்ளது.

நாமெல்லாம் நம்து நிறுவனத்தை லாபமிக்கதாக்க BSNL simமை 
மார்க்கெட் செய்யவேண்டுமென்று நமக்கு அறிவுரை செய்யும் அரசு,
 தனது உயரதிகாரிகளுக்கு Reliance Jio sim கார்டை வழ்ங்குவது 
அநியாயம்.