Tuesday, January 10, 2017

       ராமகிருஷ்ணனின் முகநூலிலிருந்து........
 "கடந்த 2 ஆண்டுகளாக சுப்புவும், ராபர்ட்டும் தலைமை பொறுப்பேற்றவுடன்
நமது சங்கத்தின் உறுப்பினர்களை தரம் பிரித்து பார்த்து, அணி என்ற
முத்திரைகுத்தி பல்வேறு துரோக செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
மாவட்ட தலைவருக்கு IMMUNITY க்கு உள்போட்டது, ஊழியர்களை காட்டி கொடுத்தது, பல தோழியர்களை பழிவாங்கியது, நிர்வாகத்திடம் மண்டியிட்டு சரணடைந்தது,

யோக்கியவானின் முகவிலாசம்
மரம் சும்மா இருக்க விரும்பினாலும்
           காற்று சும்மா இருக்க விடுவதில்லை......என்பதுபோல, 
நாம் அமைதியாக இருக்க விரும்பினாலும், நம்மை வம்புக்கு 
இழுக்கின்ற காரணத்தால்  கசப்பான  சில உண்மைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு  ஏற்ப்பட்டுள்ளது.  

பீளமேடு கிளை மாநாட்டில் ஆணவப் போக்கு !
கிளை நிர்வாகிகளின் வேண்டுகோளை புறக்கணித்து  அந்த பகுதி கோட்ட அதிகாரி, மாற்று சங்க தோழர்கள் இருக்கும்போது   
 மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்து அணி வித்தியாசத்தை காட்டியது யார் ? 

தன்னிச்சையான போக்கு !  
கோவை மாவட்டத்தில் தோழர்   ராபர்ட்ஸ் ஒரு முக்கியமான தோழர்,  மாநில சங்க நிர்வாகி, அவரையும் நிர்வாகத்தை சந்திக்கும்போது அழைத்து செல்வதுதான் நல்லது என்று வலியுறுத்தியபோது, நான்அவரை  கூப்பிட மாட்டேன் என்று செயல்பட்டது யார் ?
தோழர்கள் உமேஷ், ரவீந்திரன் ஆகியோரின் மாற்றல் 
பிரச்னையில் கண்டும் காணாமல் இருந்தது யார் ?

புதிய மாவட்ட சங்கம் பொறுப்பேற்ற பிறகுதானே அந்த 
தோழர்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன...... 

சுழல் மாற்றல் அமலாக்கத்தின்போது, புதிய உத்திரவை
 அமலாக்காமல் பழைய உத்திரவின்படி அமலாக்கவேண்டும் 
என்று விநோதமாக பிடிவாதம் பிடித்தது ஏன் ?   புதிய உத்திரவு 
என்றால் அவரது ஆதரவாளர்கள் ஒரு சிலர் தப்பித்துக் 
கொள்வார்கள் என்ற அணி நோக்கம்தானே ? 

உள்போட்டது யார் ?
மாவட்ட தலைவருக்கு, மாநில சங்க நிர்வாகிக்கு
Immunity பெற உள்போட அவசியமில்லை...... அது நமது 
அகில இந்திய சங்கம்  பெற்றுத் தந்த உரிமை..... 
  குற்றஞ்சாட்டுபவர்  மாவட்டச்  செயலராக  இருந்த காலத்தில் 
அவர் மீது  இலாகாபூர்வ   ஒழுங்கு நடவடிக்கை  விசாரணையில்   இருந்தபோது, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன், 
நான் தனியாக  பேச வேண்டும்,,, என்று தன்கூட வந்தவர்களைக்கூட 
நம்பாமல் செயல்பட்டது  யார் ?

                               இதுதானே உள்போடுவது  .......

மாவட்ட தலைவருக்கு Immunity பெற்றதை கொச்சைப்படுத்துபவர், மாவட்டச்  செயலர் என்ற ஹோதாவில் தனது தேவைக்காக பெற்ற  
மாற்றல்கள் எத்தனை எத்தனை  ?  விரல்விட்டு எண்ண முடியுமா ?
 சாய்பாபா காலனி..... ஆர்.எஸ் புரம்........சேல்ஸ்/uthaan, 
Fault control , ராம்நகர்,............மேட்டுப்பாளையம்........

தனக்கு கவுன்சிலிங்கில் கிராமப் பகுதிக்கு மாற்றல் வரும் 
என்பதால் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு அருகில்
 உள்ள மேட்டுப்பாளையத்திற்கு மாற்றல் பெற்றது யார்  ? 
மற்றவர்கள் என்ன ஆனாலும்  பராவாயில்லை..... என்று 
செயல்பட்டது யார் ?     
ஒரு சில மாதங்களிலேயே  மேட்டுப்பாளையத்திலிருந்து   சரவணம்பட்டிக்கு மாற்றல் கேட்டு அது கிடைக்காத 
விரக்தியில்  நிர்வாகத்தை  ஏசி வருவது  யார் ?

தாந்தோறித்தமான செயல்கள்
   எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் ஒற்றுமை கருதி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றால்
கூட  15 பேரை கூட்டிக் கொண்டு வந்து மாவட்ட செயலர்,
 தலைவர் ஆகியோரைக் கூட  பேசவிடாமல்  தானே துவக்கம் 
முதல் கடைசிவரை   பேசி  அக்கூட்டத்தை கேலிக்கூத்து 
ஆக்கியது யார்  ?

சுழல் மாற்றல் பிரச்னைக்காக நிர்வாகத்துடன் பேசிக் கொண்டு இருக்கும்போது  ஜன்னி பிடித்தவரைப்போல திடீரென்று   
" நான் சொல்வதையெல்லாம் நீங்கள் செய்யாவிட்டால் ........" என்று அதிகாரியை அநாகரீகமாக பேசியது யார் ?

நமது மாவட்டச் சங்கம் என்றும் உறுப்பினர்களை பிரித்துப் பார்த்து 
பிரச்னை தீர்ப்பது கிடையாது. தீர்க்கப்பட்ட பிரச்னைகளின் 
பட்டியலைப் பார்த்தாலே அது புரியும்.
உண்மை என்னவென்றால் நமது உறுப்பினர் அல்லாத பாதிக்கப்பட்டோருக்கும் நாமே முன்சென்று பிரச்னைகளை எடுத்துள்ளோம். அதன் காரணமாகத்தான் உறுப்பினர்கள் 
அல்லாதவர்களும்  ஒவ்வொரு தேர்தலிலும் நமக்கு கூடுதலாக வாக்களிக்கின்றனர்.

இந்த மாதம் கூட பல தோழர்களும் தோழியர்களும்  நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 

   ஆகவே ராமகிருஷ்ணனின் பொய்ப் பிரச்சாரத்திற்கு யாரும் 
செவிமடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment