Sunday, January 29, 2017

ஜனவரி-30   தியாகிகள் தினம் 
 மகாத்மாவை மாய்த்தது மதவெறி-
பாபர் மசூதியை இடித்தது மதவெறி
குண்டுகள் வெடித்து பல மனிதக் 
கொலைகளை செய்ததும் மதவெறி
மதவெறி மாய்த்து மனிதம் காப்போம்.
"ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு-நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும்",
பாரதியின் வாக்கு பலித்திட வேண்டும்
பாரத நாடு பயனுற வேண்டும்.
அம்பேத்கர் அளித்த அரசியல் சட்ட
மாண்பைக்   காப்போம் !
,மதச்சார்பின்மை  காப்போம்  ! !

       Image may contain: one or more people and text

Wednesday, January 25, 2017

   
                                    வாழ்த்துகிறோம்

இம்மாதம் பணி நிறைவு பெறும் எங்களது  நெருங்கிய
நண்பர்,  DGM (A)  திரு.நூரே ஆலம்  அவர்கள்    அளித்த 
விருந்தில் பங்கேற்று வாழ்த்தினோம்.

 நாங்கள் குன்னூரில் பணியாற்றியபோது RTP டெலிபோன் 
ஆப்பரேட்டராக  துரையில் நுழைந்தவர், தனது 
விடாமுயற்சியால் பம்பாய்க்கு JE ஆக பணி நியமனம் 
பெற்றார். SDEயாக கோவைக்கு மாற்றலில் வந்தவர்   
இம்மாதம்  DGM ஆக பணி நிறைவு பெறுகின்றார்.

நல்ல  பண்பாளர், பழகுதற்கு இனியவர், கடுஞ்சொல் 
பயன்படுத்தாமல் அனைவரிடமும் வேலை வாங்கும் 
திறன்  படைத்தவர்.

அவரு பணி ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய 
வாழ்த்துகிறோம்.  

Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 3 people, people standing, beard and outdoor

Tuesday, January 24, 2017

Image result for மெரினா போராட்டம்
போராட்டங்களும்
போதனைகளும்
ஒவ்வொரு போராட்டமும் மூன்று விளைவுகளை உருவாக்கும்.
1. வெற்றி
2. தோல்வி
3. படிப்பினை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தோல்வி என்று சொல்வதற்கு இம்மியளவும் காரணம் இல்லை.

இந்தப் போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கிடைத்திட்ட வெற்றி என பெருமிதம் கொள்வதில் இருவேறு கருத்துக்கள் இருக்க நியாமில்லை.

மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் உரிமைக்காகவும், நியாய்த்திற்காகவும் அறவழியில் அமைதியாகப் போராடும் என்பதை உலகுக்குகு உரக்கச் சொலியிருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் நடத்திய மொழிப்போர் வரலாற்றை கேட்டிருக்கிறோம். படிதிருக்கிறோம்.
"1968 மொழிப் போராட்டத்தின்போது, அன்றைய முதல்வர் அண்ணா மாணவர்களுடன் ஐந்து இரவுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது நினைவுக்கு வருகிறது." என்று 24.01.2017 இந்து தமிழ் நாளிதழில் திரு சமஸ் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ஏன் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றிருக்கக் கூடாது?         அப்படி நடந்திருந்தால் ஆளுவோருக்கும் பெருமை கிடைத்திருக்கும். ஒரு வேளை ஆளுவோர் போராட்டத்தை அவ்வாறு முடிக்க விரும்பாமல் வேறு வழியில் முடிக்கத் திட்டமிட்டார்களோ என்னவோ?

ஆனால் ஒன்று நிச்சயம். இந்தப் போராட்டம் நிச்சயமாக வரும் காலத்தில் தமிழகத்தில் ஒரு புதிய வரலாற்றை எழுதும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் மகோன்னதமானது. இந்தப் போராட்ட காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்குக் கிடைத்த பெருமை.

Sunday, January 22, 2017


VRSல் பணி நிறைவு பெறும் சாய்பாபா காலனி தோழியர் ரேவதி அவர்கள் 
அளித்த விருந்தில் பங்கேற்று வாழ்த்தினோம்.

                         

Wednesday, January 18, 2017


                                   Welcome to new members!


On 16-01-2017 in Chennai Telephones circle 57 new members have

joined NFTE-BSNL after quitting BSNLEU/ FNTO etc. 

We welcome all the new members into NFTE and thank all comrades 
who persuaded them to join our Union.


முகநூலில் தோழர் C.P.....

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை முதல் கன்யாகுமரி வரை மாணவ, மாணவிகளின், இளைஞர்களின் அறவழி போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது... கொங்குத்தலைநகர் கோவை வ.உ.சி மைதானத்தில் இளைஞர்களோடு் நானும் காலை 9.30 மணியில் இருந்து கலந்து கொண்டுள்ளேன்... என் வாழ்நாளில் இவ்வளவு பிரம்மாண்ட எழுச்சியை, உணர்ச்சிபூர்வமான விண்ணெதிரும் கோஷங்களைத்தாங்கிய அறவழி போராட்டத்தை கண்டதேயில்லை... காலையில் ஊடக செய்தியின்படி 8000 ஆயிரமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, நேரம் செல்லச்செல்ல கூடிக்கொண்டே வந்து மைதானமே கொள்ளாமல் அவினாசி சாலையிலும் மாணவர்கள் குவிந்தனர். லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளிம், இளைஞர்களும், எந்த ஒரு அரசியல் சாயம் இல்லாமல், பீட்டாவை தடை செய்ய வேண்டும், தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லுக்கட்டு தடையை நீக்கி, வாடி வாசலை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து, எழுச்சியுடனும், கட்டுப்பாடுடனும், உறுதியுடனும் போராட்டம் நடந்து வருகிறது... விண்முட்டும் கோஷத்தால், ஒற்றுமையால் இந்த போராட்டம் உட்சகட்டத்தை எட்டியிருக்கிறது... இனியும் ஒரு நிமிடம் கூட கால தாமதம் செய்யாமல் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்...

Image may contain: 2 people, crowd, sky and outdoor

Image may contain: 3 people, crowd and outdoor

Image may contain: 1 person, crowd and outdoor


Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor


Image may contain: text

Tuesday, January 17, 2017


                    18/01/2017 - தோழர் ஜீவா நினைவு நாள்
                                                        Image result for ஜீவானந்தம் வரலாறு

பெண்ணடிமை...தகர்த்த ஜீவா..
மண்ணடிமை.. ஒழித்த ஜீவா...
சாதிக்கொடுமை...தடுத்த ஜீவா...
சமயக்கொடுமை வெறுத்த ஜீவா...
பொதுவுடமை போற்றிய ஜீவா...
தனியுடமை எதிர்த்த ஜீவா....
நேர்மை வளர்த்த ஜீவா ..
நேசம் காட்டிய ஜீவா...
எளிமை கொண்ட ஜீவா...
புலமை அறிந்த ஜீவா...
பாழுக்குழைத்தோமடா...
 தோழா...
பசையற்றுப் போனோமடா...
மனித சுரண்டலை...
மனம் நொந்து பாடிய...
தோழர்.ஜீவா நினைவு நாளில்...
அவர் புகழ் பாடுவோம்.

Monday, January 16, 2017

              செலக்டிவ் அம்னீஷியா நோய்க்கு   
      ஆளானவருக்கு   சில நினைவூட்டல்கள்  !
Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 1 person


ராமகிருஷ்ணன் மாவட்ட செயலராக இருந்தபோது அவர் கையாலேயே 
எழுதிய செயல்பாட்டு அறிக்கையிலிருந்து  :

Image may contain: text

பதவி இல்லை என்ற ஆத்திரத்தில் தற்போது  முகநூலில் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளது :  

 " இம்மென்றால் பயந்து ஓடும் சுப்பனை இந்த மாவட்டம் முழுதும் அறியும்,
கைப்புன்னுக்கு கண்ணாடி தேவை இல்லை!! "

                                                                          
              நெஞ்சில் நின்ற சில போராட்டங்கள்  
              
                                S.T.R   ஊழியர்க்கான போராட்டம் 

 1994ஆம் ஆண்டு.....எனது வாழ்வில் முக்கியமான ஆண்டு...
எனது இரண்டாவது செல்ல  மகள் பிறந்த ஆண்டு மட்டுமல்ல...
கடுமையான சூழ்நிலையில் எனது  STR  கிளைச் சங்க 
உறுப்பினர்களை பாதுகாக்க வீறுகொண்டு போராடிய வருடம்.........

அப்போது  கோவை மாவட்டத்தில்  VRC கோலோச்சிய காலம்.
நமது தோழர்களை குறிவைத்து பழிவாங்கிய காலம். பல கிளைகள்
அவரது கட்டுப்பாட்டில்.  STR  போன்ற ஒரு சில கிளைகள் மட்டுமே.
நமக்கு ஆதரவாக. 
நான்  STR   E-4 லைன் ஸ்டாப் சங்க  கிளையின் செயலர்.

STR  ஊழியர்கள்  கவரக்கல் . குரங்குமுடி, வால்பாறை போன்ற
வன விலங்குகள் உள்ள காட்டுப் பகுதிகளில் கேசுவல் ஊழியர்களாக
 பணியாற்றி வந்தனர்.

 RM ஊழியர்கள் நிரந்தரத்தின்போது,  STR  பகுதி  ஊழியர்களை
கோவை மாவட்டத்தின் பகுதிகளில் போஸ்டிங் போடக்கூடாது
என்று நிர்வாகத்திடம்  தவறான  உடன்பாட்டை  போட்டார் 
மாவட்டச் செயலர் VRC. அந்த தவறான முடிவை எதிர்த்து 
PGM அலுவலகம் முன்உண்ணாவிரதம்   துவக்கினேன்.

 தோழர் ஜெகன்," பிரச்னை மிகவும் சிக்கலானது. எதிரியோ
பலமானவனவர்.  உண்ணாவிரதத்தை  5 அல்லது 6 நாட்கள் தொடரவேண்டியதிருக்கும்..... சாத்தியமா ? "   என்று கேட்டார்.
அது பற்றி கவலை இல்லை..... நியாயம் பிறக்க எத்தனை நாள் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்க தயார் என்று
கூறினேன்.

 இதற்கிடையே ,   VRC மாவட்ட   நிர்வாகத்தை சந்தித்து
போராடும்  எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

மூன்றாம் நாள்,அதே மாவட்ட நிர்வாகம்,  மாநில சங்கத்தின் 
வலியுறுத்தலால், மாநில நிர்வாகத்தின் உத்திரவின் 
அடிப்படையில் மலைப்பகுதிக்கு சென்று  ST காலிடங்களுக்கு 
தகுதியான நபர்களை தேடிப்பிடித்து அவர்களை புதியதாக 
நியமித்து விட்டு அங்கு பணியாற்றி வந்த STR கேசுவல் 
ஊழியர்களை நிரந்தமாக்கி  கோவை  மாவட்ட  பகுதியில் 
போஸ்டிங்க் செய்தது.

அப்போதெல்லாம் ராமகிருஷ்ணன் எங்கே இருந்தாரோ
தெரியவில்லை !
------------------------------------------------------------------------------------------------------

 டெலிகாம் மெக்கானிக்காக   புதியதாக பதவி உயர்வு பெற்ற  
RM  ஊழியர்கள் எந்தவிதமான கணக்கீடுமின்றி  வெளியூருக்கு 
தூக்கி அடிக்கப்பட்டபோது, 

 " Part time GMஏ ....... பழிவாங்காதே ! பழிவாங்காதே ! லைன் ஸ்டாப் ஊழியர்களை பழிவாங்காதே !" என்று கோஷமிட்டு போராட்டத்தை
துவக்கிவைத்ததை பாவம் பதவி    இழந்த சோகத்தில் மறந்து விட்டார் ராமகிருஷ்ணன்.
-----------------------------------------------------------------------------------------------------------
  Image may contain: 2 people, people sitting
Image may contain: 5 people, people standing, people sitting and stripes
2005ல் ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலராக பொறுப்பேற்றவுடன்,
SDE  ராமநாதபுரம், T.Mech  தோழர் இளங்கோவிற்கு பழிவாங்கும் 
வகையில் இன்கிரிமெண்ட் கட் வழங்கினார்.  தொலைபேசியில் 
பேசும்போது ரத்து செய்வதாக கூறிவிட்டு  தண்டனை கடிதத்தை 
அஞ்சல் மூலம் அனுப்பி  ஏமாற்றிவிட்டார்  அந்த அதிகாரி என்ற  தகவலை தோழர் ராம்கி என்னிடம் கூறியவுடன் இதை 
அனுமதிக்கக் கூடாது,  நீங்கள் நேரடியாக  சென்று பேசிப் 
பாருங்கள்....... மறுத்தால் உடனடியாக உண்ணாவிரதத்தை துவக்குங்கள்..... நான் அனைவருக்கும் தகவல் கொடுத்து 
அழைத்து வருகிறேன் என்று கூறி ஒரு சில மணித்துளிகளில் ராபர்ட்ஸும் நானும்   நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களை திரட்டி போராட்டத்தை  வெற்றிகரமாக்கியதை மறந்து விட்டு பதவி  இழந்தவுடன் எங்களை அடிவருடிகள்   என்று எழுதும் நிலைக்கு    வந்துவிட்டார் ராம்கீ  ........
---------------------------------------------------------------------------------------------------------------

 நமது சங்கத்திற்கு    அங்கீகாரம் இல்லாதபோது,  வெயிட்டிங்க் லிஸ்டில் முதலில்  இருந்த நமது தோழியருக்கு மாற்றல் போடாமல்,  மாற்று சங்க ஊழியருக்கு மாற்றல் போட்டதை கண்டித்து DGM அலுவலக கிளைச் செயலரான  நான்  உடனடியாக சாய்பாபா காலனி DGM அறை   முன் உண்ணாவிரதம் துவங்கியதையும் தனது சொந்த வேலையை சிறிது
நேரம் ஒதுக்கி வைத்து வந்ததையும்  ராமகிருஷ்ணன்  மறந்தது  ஏனோ ?
----------------------------------------------------------------------------------------------------------

Image may contain: one or more people
Image may contain: 1 person

நிர்வாக அலுவலக மாற்றலின்போது  பாரபட்சமான  நிர்வாகத்தின்   போக்கை  எதிர்த்து சாய்பாபா தொலைபேசி நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்ததையும் மறந்து விட்டார்  ராம்கி.

----------------------------------------------------------------------------------------------------

Image may contain: 3 people, indoor

அவர் மாவட்டச் செயலரான பின் மெயின் தொலைபேசி நிலையத்தில்
 மூன்று ஆண்டுகளாக   தீர்க்கப்படா த பிரச்னைக்காக நான் உண்ணாவிரதம் இருந்ததையும் மாவட்டச் செயலரான இவர் கண்டும் காணாமல் இருந்ததையும் தற்போதைய பொது மேலாளருடன் நான் கடுமையாக வாதாடும்போது அதை தடுத்ததும் நான் மட்டுமே இது நாள்வரை அறிந்த செய்தி........

--------------------------------------------------------------------------------------------------------

      Image may contain: 9 people                                  No automatic alt text available.

ஏப்ரல் 21, 22, 2015 அன்று நாடெங்கும் உள்ள BSNL  ஊழியர்கள் கொதித்தெழுந்து போராடினார்கள்.அப்போது போரம் தலைவராக 
இருந்த ராமகிருஷ்ணன் போராட்ட களத்தில் இல்லாமல் எங்கள் யாருக்கும் தெரியாமல் தான் மீண்டும் மாவட்ட செயலர் ஆக
வேண்டும் என்பதற்காக  ரகசிய கூட்டத்தை  ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்............ 
-----------------------------------------------------------------------------------------------------------------


     வேண்டாம் விபரீதம் ......

அவர் மீதான இலாகா விசாரணைக்கு சென்னை தலைவரை எப்படி அழைத்தார்........... பிறகு அவரை விடுத்து புதியவரை சந்திக்க
செல்லும்போது நானும் கூட வரவேண்டும் என்று அழைத்த முறை
ஆகியவற்றை  விளக்கி  எழுத எனது மனம் ஒப்பவில்லை............

அகில இந்திய சங்கமே  BSNLEU சங்கத்தோடு ஒன்றுபட்ட
போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தாலும் நான் சேர்ந்து
செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவர்,   திடீரென்று 
அதன் ஊதுகுழலாக மாறியது எப்படி ?      

ராமகிருஷ்ணன் பாணியில், அவர்    RM  ஆவதற்கு முன்னும்
பின்னும், மாவட்ட செயலர்  ஆவதற்கு முன்னும் பின்னும்
இடையிலேயும்  நான் அறிந்தவற்றையும்,

லூர்துசாமி இவரை ஆட்டி வைத்த நிகழ்ச்சிகளைப் பற்றியும்,

மற்ற தலைவர்கள் இவரைப் பற்றி கூறியதையும் நான்
எழுதினால் இந்த பக்கங்கள் முடை  நாற்றம் எடுக்கும்.
அவற்றை எல்லாம்  எழுதி எனது தரத்தை தாழ்த்திக்
கொள்ள விரும்பவில்லை........

பதவி கேட்டு என் வீட்டுக்கே  வந்தவர்கள் யார் யார் என்ற 
ரகசியத்தையும் நான் வெளியிட விரும்பவில்லை.......  
    

Sunday, January 15, 2017

பொய்ப் பிரச்சாரமும் உண்மை நிலையும் 

தோழர் முருகேசன் மாவட்ட தலைவராக் இருந்தபோது 
இவருக்கு பெயரே ""சித்திரகுப்தன்"" என சூட்டினார்.


                                முகநூலில் ராமகிருஷ்ணன்........

தோழர் முருகேசன் என் மீது அன்பு மிக்கவர். எனக்கே உரிய பாணியில்
சிரித்துக் கொண்டே அவரிடம், எனக்கு சித்திரகுப்தன் என்று செல்லப் 
பெயர் வைத்தது ஏன் ? என்று கேட்டேன்.  அவர் கீழ்க்கண்ட பதிலை கூறி அதனால்தான் உனக்கு அந்த பெயரை வைத்துள்ளேன் என்றார். 


சித்திரகுப்தர்: பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் 
பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும்.
 மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல 
பாவம் செய்யும் மானிடர்களை நரகத்திற்கும், நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை 
உடையவர் சித்ரகுப்தர். 

நம்பிக்கைகள்[தொகு]

  • உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்திர புத்திர நாயனார்தான் என்பது இந்து சமய நம்பிக்கையுடையவர்களின் நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்பதும் இந்து சமயத்தவர்களின் நம்பிக்கை.
  • நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி என்றும் கேது தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோசம் நீங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், அவர்களது பாவங்களை குறைப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை.

                                  

நமது மூத்த தோழர்களை சுப்பன்  அவமரியாதையாக விமர்சிப்பதால்,
நமது முன்னால் மாவட்ட செயலர்கள் அனைவராலும் 
வெறுக்கப்பட்ட நபர், 
1. மறைந்த தோழர் மாசானன்
                                      முகநூலில் ராமகிருஷ்ணன்........

அவர் காலமானதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நானும்
 ராஜவீதி தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும்  தோழர் 
மாரிமுத்துவும் கே.ஜீ மருத்துவமனை சென்று அவருக்கு ரத்தம்
வழங்கினோம். பரவசப்பட்ட தோழர், மாசானன் இவர்தான் 
சுப்பராயன் என்று அவரது மனைவி, தம்பி,மகள் ஆகியோரிடம் 
சிலாகித்து பேசியதை இன்றும் மறக்க முடியவில்லை.   



நமது சங்கத்தில் எப்பொழுதுமே 2 வது இடத்தில் இவர்
தொடர்ந்து இருப்பார், அனைத்து மாவட்ட செயலர்களின்
குமாஸ்தாவாக பணியாற்றினார்.டைரியில் எழுதுவது, 
பேட்டிகளின் போது நமது மாவட்ட செயலர்களின் 
காதுகளில் மெல்ல சொல்வது என கைத்தடியாக இருந்தார்.
                                     முகநூலில் ராமகிருஷ்ணன்........
ஆம் ! நான் என்றுமே  என்னை முன்நிறுத்தி சங்கப் பணி 
ஆற்றியதில்லை. யார் மாவட்டச் செயலராக இருந்தாலும் 
அவருடன் இணைந்து பணி ஆற்றி உள்ளேன். அவர் மூலமே 
பிரச்னைகளை எடுக்க வேண்டும் என்று  உறுதியாக இருந்ததால்
அவர் மறந்தால் கூட அவர்  காதுகளில் மெல்ல சொல்வது எனது 
பாணி. ராமகிருஷ்ணனைப்போல் தான்தோன்றித்தனமாகவோ,
 தான் தான் என்று கருதியோ  தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் 
செயலரை அவமரியாதை செய்யும் விதமாகவோ  நடந்ததில்லை. 
அதை இன்றும் பெருமையாகவே கருதுகிறேன். 

நான் அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் துணையாக இருந்தேன் 
என்ற உண்மையை எடுத்துரைத்தமைக்கு நன்றி ! 









                              மறக்க முடியாத நிகழ்வு !
எனது தொழிற்சங்க  நுழைவைப் பற்றி ராம்கி  அவரது முக நூலில் முழுமையாக     எழுதாத காரணத்தால் இதை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.    

நான் 21/6/79 அன்று குன்னூரில் பணியில் துவங்கிய அன்று பார்த்த 
duty 16.40 duty.  அன்று இரவு 9 ணிக்கு  duty முடிந்தவுடன் என்னுடன் 
பணியாற்றிய தோழர் K.S. கோபாலகிருஷ்ணன், அவரது அறைக்கு 
என்னை அழைத்துச்  சென்று அங்கு ஒரு  கட்டில் மெத்தைஆகியவற்றை  
எனக்கு ஒதுக்கி தங்க வைத்தார். அடுத்த நாள் அந்த லாட்ஜ் ஓனரிடம் 
சென்று என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அந்த மாதம் சம்பளம் வந்தவுடன் என்னிடம் FNPTO  சங்கத்திற்கு 
சந்தாவை பெற்றுக் கொண்டார். புதியதாக இலாகாவில்  நுழைந்த 
எனக்கு சங்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

 அதன் பிறகு   NFPTE  சங்கத் தலைவர்கள் இரண்டு அணியினரும்
என்னை  அணுகினர். நான் கல்லூரி நாட்களிலேயே  1975 முதல் 1979வரை 
 கோவை டவுன் ஹாலில் உள்ள  விக்டோரியா நூலகத்தில் ஜனசக்தி, 
தீக்கதிர் இரண்டையும் கூர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றவன். எனது 
கல்லூரித் தோழர் சுப்ரமணியம் என்னிடம் புதிய கலாச்சாரம் இதழை 
கொடுத்து படிக்கச் சொல்வார். அதனால் இரண்டு அணியினரின் 
கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு யோசிக்க துவங்கினேன்.


அப்போது குன்னூர் தொலைபேசி நிலையத்தில்  பணியாற்ற ஊழியர்கள் வெளியூரிலிருந்து   வந்து கொண்டிருந்தனர். அந்த ஊரில் இருந்த சில 
மூத்தவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக  பயன்படுத்தி வந்தனர். 
ஆட்பற்றாக்குறை காரணமாக  OT  வந்தால் முதலில் தங்களுக்கு 
போட்டுக் கொண்டு மீதமிருந்தால்தான் புதியவர்களுக்குபோடுவார்கள். 
அதுவும் தங்களுக்கு சாதகமான நேரத்திற்கு போட்டுக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு பாதகமான நேரத்திற்கு போடுவார்கள். தங்களுக்கு வேண்டியவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்... போகலாம் மற்றவர்களுக்கோ கடும் கட்டுப்பாடு.... 

இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க NFPTE  E 3 சங்கத்திற்கு புதிய கிளைச் 
செயலராக   தோழர் கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுக்க வேண்டும், 
அதற்கு உனது  ஆதரவு தேவை, சங்க உறுப்பினராக  சேர் என்று எனது 
உற்ற நண்பர்கள் கூறியதால் நான்   NFPTEல்  இணைந்தேன். கிளை 
மாநாட்டில் விவாதம் நள்ளிரவு வரை நடந்தது. நான் புதியதாக 
சேர்ந்ததால் எனக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்று  போஸ் 
அணியினர் வாதம் செய்தனர். நான் வாய்ப்பு கேட்டு பேசினேன். இந்த 
சங்கம்தான் புரட்சிகரமான சங்கம் என்று இரண்டு அணியினரும் 
என்னை அணுகினீர்கள்..... ஆனால்  எனது வாக்குரிமை பற்றி இப்போது 
விவாதம் செய்து என்னை அவமரியாதை செய்கிறீர்கள். எனக்கு இந்த 
மாநாட்டில் வாக்குரிமை வேண்டாம். நான் இந்த சங்கத்தை விட்டு 
விலக மாட்டேன். அடுத்த மாநாட்டில் எனது வாக்குரிமையை முழு 
உரிமையோடு பயன்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்தேன்.  
அவையோர்  பலத்த கைத்தட்டலோடு எனக்கு உற்சாகம் அளித்தனர். 
ஒரு சில நொடிகளிலேயே அவை என் பக்கம் திரும்பியது. சங்கத்திற்கு 
வந்த புதியவரை அவமதிக்கக் கூடாது.  எனக்கு வாக்குரிமை  அளிக்க  
வேண்டும்  என்று ஏகமனதாக முடிவானது.

நான் குப்தா அணியின் தேர்தல் ஏஜெண்டுகளில் ஒருவராக நியமிக்கப்
பட்டேன். குப்தா அணி அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
    
வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே  பழிவாங்கும் வகையில்
எனக்கு மெமோ கொடுக்கப்பட்டது. பிறகு அது கிளைச் சங்கத்தால்
தீர்க்கப்பட்டது. 

உடன் பணியாற்றியவர்கள் தோழர்கள் ராமலிங்கம், சுந்தரம் ஆகியோர்.
  

          

Saturday, January 14, 2017

                                 நெகிழ வைத்த அனுபவங்கள் !

கடந்த சில நாட்களாக  பல முன்னணித் தோழர்களிடமும் 
தோழியர்களிடமும்  நமது அமைப்பை காக்கும் கருத்துப் 
பறிமாற்றம் நடந்தது. பணி ஓய்வு  பெற்ற பல தோழர்களும் 
தோழியர்களும் சங்க அலுவலகத்திற்கே வந்து  நன்கொடை 
வழங்கி தமது சங்கப்பற்றை வெளிக்காட்டினர்.   

யார் என்ன பிரச்சாரம் செய்தாலும் அதற்கு செவிமடுக்க 
மாட்டோம் என்ற தோழர் தோழியரின் உறுதிப்பாடு நமக்கு 
மேலும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது.

3 தோழியர்களும் 1 தோழரும் நமது சங்கத்திற்கு சந்தா 
பிடித்தம் செய்ய கடிதம் கொடுத்துள்ளனர். 

அதில் ஒருவர் மூத்த தோழியர்  : அவர் எனக்கு அனுப்பிய 
வாழ்த்து:

      " சத்தமின்றி யுத்தம் செய்யும் உன் மனம், நிலையான நிம்மதி

பெற வாழ்த்துக்கள். உன் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்களைப்
பற்றி கவலைப்படாதே.  நீ  அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் 
இருக்கின்றாய் என்று பெருமைப் படு."    

 இன்னொருவர் இளையவர். அவரது படிவத்தை அவினாசி சென்று
 பெற்று வந்தவர் தோழர் வேலுசாமி. தற்போது JTO பயிற்சியில் இருப்பவர்.   

அந்த தோழியர் இன்னலுக்கு ஆளானபோது நாம் தலையிட்டு
அவர் பிரச்னையை தீர்த்தோம்.  

 பிரச்னை சுமுகமாக முடிந்தவுடன் அந்த ஊழியர் நமக்கு அனுப்பிய   SMS :

Sir, thank you so much for the efforts you have taken to transfer me. I will never forget
 this  help in my life. My whole family is happy.... thank you sir...



 மற்றொரு தோழியர் நமது   சங்கத்தின் முயற்சியால் 
 கருணை அடிப்படையில்  பணிக்கு வந்தவர். அவரிடம் 
கிணத்துக்கடவுக்கு சென்று சந்தா படிவத்தை 
பெற்று வந்தவர் பணி ஓய்வு பெற்ற குறிச்சி  தோழர் 
தண்டபாணி அவர்கள்.
 அனைவரையும்   பாராட்ட வார்த்தைகள் இல்லை. 

                           நன்றி ! மனமார்ந்த நன்றி !! 


   

Friday, January 13, 2017

நிதி ஆயோக் அமைப்பு BSNL, ITI உள்ளிட்ட பொதுத் துறை 
நிறுவனங்களை தனியாருக்கு விற்க பரிந்துரைத்து
அதற்கான நடவடிக்கைகளை அந்தந்த பொதுத் துறை 
நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைச்சகங்கள் எடுக்குமாறு 
கூறியது.


தற்போது அதன்மீது என்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள் 
என்று கேள்வி கேட்டு பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் 
அனுப்பப்பட்டுள்ளது.

No automatic alt text available.
Image result for பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Thursday, January 12, 2017

                                           செலக்ட்டிவ் அம்னீஷியா !

 " சமீபத்தில் எழுத்தர்/இயக்குனர்களுக்கு நிர்வாகம் சுப்பனின் 
ஆசீர்வாதத்துடன் கட்டாய மாற்றல் உத்தரவு இட்டது".

பதவி இழந்த அதிர்ச்சியில் மனச் சிதைவு நோய்க்கு ஆளானவர் 
கிளப்பும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும்  அவருக்குத்தான் பொருந்தும்.

2008ல் தோழியர் LD ,  L.சுப்பராயன்,  SSG உள்ளிட்ட 80க்கும் 
மேற்பட்ட Sr.TOA  ஊழியர்க்கு சுழல் மாற்றல் போடப்பட்டது.

அதன்பிறகு இருமுறை சுழல் மாற்றல் அமலாக்கப்பட்டது.
 நூற்றுக்கும் மேற்பட்ட Sr.TOA ஊழியர்கள்   மாற்றப்பட்டனர். 
ராமகிருஷ்ணன் பாணியில்  " இவர்கள்  எல்லோரும் அவரால் பழிவாங்கப்பட்டவர்களா ?"

ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றவுடன்  SSX, CTMX  மூடப்பட்டு 
100க்கும் மேற்பட்ட  Sr.TOA  P   தோழியர்கள் மாற்றப்பட்டனர்.  

இவர்கள் எல்லோரும் அவரால் பழிவாங்கப்பட்டவர்களா ?  

2010லிருந்து எத்தனை எத்தனை போன்மெக்கானிக் ஊழியர்கள் 
வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல தொலைதூர
ஊர்களுக்கு மாற்றப்பட்டனர்.

இவர்கள் எல்லோரும் அவரால் பழிவாங்கப்பட்டவர்களா ?

 இவருக்கு மாற்றல் பெற,   Fault Controlல்  T.M  ஊழியர்க்கு 
வேலை  ஏதுமில்லை, ஆட்பற்றாக்குறை உள்ள Out door   பகுதிக்கு 
மாற்றுங்கள் என்று இலாகா மீது மிகவும் அக்கறை உள்ளது போல 
நடித்ததை என்ன வென்று அழைக்க ?

21/4/2015 BSNL ஊழியர்கள்/ அதிகாரிகள் நாடெங்கும்   இரண்டு நாள் 
வேலை நிறுத்தத்தை துவங்கிய நாள்.அன்று மாவட்டச் செயலராக, 
போரம் தலைவராக இருந்த இவர் என்ன  செய்து கொண்டு இருந்தார் 
என்பதை இந்த மாவீரரின் மனசாட்சிக்கே விட்டு  விடுகிறோம் ........    

15/9/16 அன்று எங்கள் யாருக்கும் தெரியாமல் கோவை 
பொது மேலாளர் அவர்களிடம் மாநிலச் செயலர் உங்களை 
சந்திக்க விரும்புகிறார் என்று பொய் சொல்லி அழைத்துச் 
சென்று அவர் முன்னிலையில் பேசியது என்ன ? தன்கூட
 பணியாற்றிய ஊழியர்க்கு குறைவான தண்டனை 
கொடுத்தீர்களே ...... என்று காட்டிக் கொடுத்தது யார் ? 

அடுத்தநாளே சென்னை  நிரந்தரத்  தலைவரிடம் மாநிலச் செயலரைப்பற்றி சொன்னது என்ன ?

நிமிடத்திற்கு நிமிடம்  தனது நிலைபாடுகளை மாற்றி மாற்றி  
பேசுவது   யார் ? ஏன் ?   

தன் மீது இத்தனை குறைகளை வைத்துக் கொண்டு, மாவட்டச் 
செயலர், மாவட்டத்  தலைவர் மீது வீண் பழி சுமத்துவது ஏன் ?

அவரை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது. 

என்ன செய்தால் பித்தம் தெளியுமோ !  
  

Wednesday, January 11, 2017

                 வெட்கப்பட ஏதுமில்லை ! 
பதவியை இழந்த அதிர்ச்சியில் மனச் சிதைவு நோய்க்கு ஆளானவரின் கேள்வி ! 
                                                  வெட்கமில்லை!!!!

 " 2 மாதத்திற்குல் மாற்றலில் சென்ற BSNLEU தோழர் பழைய இடமே வந்தது எப்படி?? "

   TRI  Telephone revenue Inspector பதவி ஒரு டென்யூர் பதவி. 
அதற்கு  பலமுறை  விருப்பம் கேட்டும் யாரும் தரவில்லை . 
அந்த பொறுப்புக்கு உடனடியாக ஒருவரை நியமிக்க  அவசர 
நிர்வாகத்  தேவை  உள்ளதால் மாவட்ட சங்கத்திற்கு தகவல் கொடுத்தபிறகுதான் ஏற்கனவே அப்பதவியில் இருந்த தோழர் 
மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பொழுதும் தகுதியான நபர் விண்ணப்பித்தால் அவருக்கு 
அந்த பொறுப்பை நாம்  வாங்கித் தருவோம் !