Saturday, July 30, 2016

சென்னை மாநில சங்க அலுவலகத்தில் நடந்த புதிய மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் !

மாநிலச் செயலரின் அறிக்கையை படிக்க   கீழே கிளிக்   செய்யவும் !!

30-7-16 புதிய பொறுப்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள்- செயலக கூட்டம்












   CGM அவர்களுடன் நடந்த புதிய மாநில சங்க 
            நிர்வாகிகள் இனிய  அறிமுக  நிகழ்ச்சி  





  








இம்மாதம் பணிநிறைவு பெறும்
இனிய தோழன் ஈரோடு குமாருக்கு
இதயங் கனிந்த நல் வாழ்த்து.
* ஜுலை 1956ல் உதித்த உதயகுமார்.
* ஈரோடு ஈன்றெடுத்த தவக்குமார்.
* அனைவருக்கும் இவர் அன்புகுமார்.
* போராட்டமென்றால் கோபக்குமார்.
* எடுத்த காரியத்தில் ஜெயக்குமார்.
* சேவை செய்யும்போது சாந்தகுமார்.
* பாரபட்சமின்றி பழகும் பாலகுமார்.
*விவேகச் செயலில் விஜயகுமார்.
* இயக்க விசுவாசத்தில இவர் இன்பகுமார்.
* மொத்தத்தில் நாங்கள் வாழ்த்தி 

* வழியனுப்பும் வசந்தகுமார்.
வாழ்க நலமுடன் !   வாழ்க வளமுடன் !!




எமதருமைத் தோழர் G.ஜெயராமன் 31.07.2016 அன்று பணி ஓய்வு பெறுகிறார். நமது ஒப்பற்ற சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலர். 
தமிழ் மாநில சங்கத்தின் ஆற்றல்மிகு முன்னாள் மாநிலப்பொருளர். 
முன்னாள் கடலூர் மாவட்டச்செயலர் என வரலாறு பல படைத்தவர்.

ஓய்விலாசூரியனாய் இயக்கப்பணியைத் தொடரும் தோழர்  ஜி.ஜெயராமன் நமது தோழர்களின் இயக்க செயல்பாட்டுக்கு ஊற்றுக்கண். தனக்கு எத்தகைய பேராபத்து வந்தபோதும் நேர்மையற்ற நிர்வாகத்தின் ஓரம் சாராதவர் 

தமிழ் மாநில சங்கப் பொருளராக இருந்தபோது  சென்னை மாநகரில் 
நமது மாநில சங்ககக்கட்டிடம் கம்பீரமாய் எழுந்து நிற்பதற்கு 
ஆதாரமாகி உழைத்தவர். 

கடலூரில் தமிழ் மாநில நான்காம் பிரிவு சங்கத்தின் மாநாடு நிகழ்ந்தபோது NFPTE சங்கத்தின் செங்கொடி உயர்த்தி ஆனைமீது 
அமர்ந்து வெற்றிக்கோஷமிட்ட சங்கப் பொறுப்பாளி.
கடலூரின் பெருமைமிகு தோழர்கள் தொழிற்சங்க வரலாற்றில் 
தடம் பதித்த வழிகாட்டிகள் ரகு, ரெங்கனாதன் ஆகியோரின்  
உற்ற தோழமை. 

தோழர்கள் இடையே மேடை ஏறி பேச   துவங்கிவிட்டால்  தான் ஏற்றுகொண்ட கொள்கையை விவாதிப்பதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். 
தமிழின் பாசமிகு அரண். தமிழ் இலக்கியத்திற்கு தொழிற்சங்க அரங்கிலே குளிர் நிழல் ஈந்த ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் ஆழமாய் அறிந்த மார்கசீயவாதி. கடலூர் தமிழ்ச்சான்றோர்கள் பலரின் அன்பிற்குப் பாத்திரமானவர்.

ஒரு கவிஞர். வெளிச்சப்புள்ளிகள்- என்னும் கவிதைத்தொகுப்புவள்ளளலார் ஒரு சமூக ஞானிமக்கள் பக்கம் வள்ளலார் -என்னும் உரை நடை நூல்கள் தந்தவர்.ஆழ்ந்த தமிழ் அறிவுப்பெட்டகம் புதுக்கவிதைக்காரர் ஞானக்கூத்தன் அவர்களால்'ஒரு நல்ல கவிஞர்என பாராட்டப் பெற்றவர். நாமும் நமது தோழர் தமிழ்ப்பற்றினைப் போற்றி வணக்கம் சொல்வோம்.

தோழர் ஜெயராமன் அவர்களின் பணி ஓய்வுக் காலம் சிறப்புடன்
 அமைய வாழ்த்துவோம் ! 



Displaying gj ls.jpgDisplaying gj ls.jpgDisplaying gj ls.jpg

Wednesday, July 27, 2016


              
  

தோழர் K. நடராஜன் அவர்களின்    ஜூலை 12 முகநூல்
செய்திக்கு நான் ஒரு கமெண்ட கொடுத்து இருந்தேன்.

அந்த புகைப்படத்தில் தோழர் நடராஜன் அவர்களின்
முகம் கருப்படித்துள்ளதே என்ற ஒரு தோழரின் 
கேள்விக்கு, 
 " தோழர் நடராஜன் விரைவில் ஜொலிப்பார்
என்று கமென்ட் எழுதியிருந்தேன்.

எனது உள்ளுணர்வு   ( intuition)  சாத்தியமானதில்  எனக்கு 
இந்த மாநில மாநாட்டு முடிவில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தோழர் நடராஜனின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.



  வேலூர் மாநில மாநாட்டில் சார்பாளர்/பார்வையாளர்  தோழர்கள்   ஆயிரக்கணக்கில்  திரண்டனர்.  

அனைவருக்கும் மிகச்சிறப்பான ஏற்பாடுகளை, உபசரிப்பை 

வேலூர் தோழர்கள் கண்ணுறங்காது செய்திருந்தனர்

வரவேற்புக்குழு பொதுச்செயலாளர் தோழர்.நெடுமாறன் 

தலைமையில் மாவட்டச் செயலர் தோழர்கள் அல்லிராஜா
சென்னகேசவன், மதியழகன் வெங்கடேசன்   உள்ளிட்ட  வேலூர்  தோழர்  அனைவரும் கருமமே கண்ணாய்  கருத்தாய் 
உழைத்தனர்.  

தோழர்களுக்கு நம் பாராட்டுகளையும்   நன்றியையும்  
உரித்தாக்குகிறோம்.

அவர்களின் பணிக்கு எடுத்துக்காட்டு மாநாட்டுக்கு
முன்புதான் தோழர் அல்லிராஜாவின் குடும்பத்தில் மிகப் 
பெரிய சோகம் இழப்பு

அதன் சாயலே இல்லாமல் தோழர் மாநாட்டுப் பணியில்
பம்பரமாய் சுழன்றது  அந்த செய்தி அறிந்தவர்கள்  மனதில் 
ஒரு  விளக்க முடியாத நெகிழ்ச்சியை உருவாக்கியது.

        தோழர் அல்லிராஜாவுக்கு நமது   Red Salute.    

 வரவேற்புக்குழுவின்  அத்துணை தோழர்களின் உழைப்புக்கு

தலைவணங்குகிறோம்.









Tuesday, July 26, 2016


         Stragetic Sale of BSNL Opposed by NFTE-BSNL 

மோடி அரசு நிறுவனம் BSNL, MTNL  உள்ளிட்ட பல பொதுத் துறை நிறுவனங்களை ஒரு சில தனியார் கம்பெனிகளுக்கு விற்றுவிட
துடிக்கிறது.

  பண்டிட்நேருஜி  காலத்திலிருந்து திட்டக் கமிஷன் அமைக்கப்பட்டு
ஒரளவு  திட்டமிட்ட முன்னேற்றம்  காணப்பட்டது. மோடி அரசு
பிற்போக்குத்தனமாக   அந்த திட்ட கமிஷனை கலைத்துவிட்டு நிதி
ஆயோக் என்ற நிதி திரட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட
அமைப்பை உருவாக்கியது.

                        அந்த  நிதி ஆயோக்  BSNL உள்ளிட்ட பல பொதுத் துறை 
நிறுவனங்களை பங்கு விற்பனை  மூலம் தனியார்மயம் செய்யாமல்  நேரடியாக ஒவ்வொரு கம்பெனியின்  மைனாரிட்டி பங்குகளை  ஒவ்வொரு தனியார் கம்பெனிக்கும் விற்க பரிந்துரை செய்து,  ஒப்புதலுக்கு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளது. அதன் 
மூலம் அந்த கம்பெனியின் நிர்வாகம் அந்த தனியார் கம்பெனியின்   
கைகளுக்கு சென்று விடும். 

எந்நேரமும் அதற்கான ஒப்புதல் வரலாம் எனற சூழலில்,
அந்த பரிந்துரையை  கடுமையாக எதிர்த்து நிர்வாகத்திற்கு
கடிதம் எழுதியுள்ளது தலைமை.   

  Strategic Sale of BSNL/MTNL regarding. Letter No.-TF-41-1, dt-25-07-2016.

                                              Click Here

      

      வந்தார் ....வென்றார் ...சென்றார் ...


நீயும் ... நானும் ...ஒண்ணு ..... ...
நம்ம மேல எல்லோர்க்கும் ஒரு கண்ணு .......
இந்தியா ...பாகிஸ்தான் அல்ல நானும் பட்டாபியும் ..........
ஒன்றுபட்ட ஹிந்துஸ்தான் ............
என முழக்கமிட்டு ... வேலூரில் ஒற்றுமை மாநாடு 
அமைத்திட்ட ... தோழர் சி கே  எம் ...



                                 கும்பகோணம் வலைதளத்திலிருந்து

Monday, July 25, 2016

  12-8-16 அன்று  நாடு தழுவிய தர்ணா

நமது கூட்டணி சங்கங்கள் அமைத்துள்ள தேசிய போரம் சார்பாக 
கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடத்த  
அறைகூவல் விடப்பட்டுள்ளது

1.  மார்ச் 2016 அன்று தேசிய கவுன்சிலில் ஒப்புக் கொண்டபடி HRA வை 78.2 சத அடிப்படையில் வழங்க வேண்டும் 

2. ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான போனஸை (PLI ) வழங்க வேண்டும்  .  

3. 1-1-2017 முதல் அமலாக வேண்டிய  ஊதிய மாற்ற உடன்பாட்டை உருவாக்க கூட்டு ஊதிய மாற்ற கமிட்டியை உடனடியாக அமைக்க   வேண்டும் 

4.  மத்திய அரசின் நிதி ஆலோசனை குழு (நிதிஆயோக்)  நமது  
 BSNL நிறுவனத்தை      தனியார் கம்பெனிக்கு குறுக்குவழியில் 
விற்பனை செய்யலாம் என்ற பரிந்துரையை      நிராகரிக்க  வேண்டும்.

   மத்திய சங்க அறைகூவலை அனைத்து ஊழியர்களையும்
   திரட்டி  அமலாக்குவோம் !  


 Day long Dharna on 12-08-2016 and lunch hour demonstration – reg. 

              Letter No.-TF-1/5(F), dt-25-07-2016. 

                                      Click Here


                       12-8-16 அன்று  நாடு தழுவிய தர்ணா

நமது கூட்டணி சங்கங்கள் அமைத்துள்ள தேசிய போரம் சார்பாக 
கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடத்த  
அறைகூவல் விடப்பட்டுள்ளது

1.  மார்ச் 2016 அன்று தேசிய கவுன்சிலில் ஒப்புக் கொண்டபடி HRA வை 78.2 சத அடிப்படையில் வழங்க வேண்டும் 

2. ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான போனஸை (PLI ) வழங்க வேண்டும்  .  

3. 1-1-2017 முதல் அமலாக வேண்டிய  ஊதிய மாற்ற உடன்பாட்டை 
உருவாக்க கூட்டு ஊதிய மாற்ற கமிட்டியை உடனடியாக அமைக்க   வேண்டும் 

4.  மத்திய அரசின் நிதி ஆலோசனை குழு (நிதிஆயோக்)  நமது  
 BSNL நிறுவனத்தை      தனியார் கம்பெனிக்கு குறுக்குவழியில் 
விற்பனை செய்யலாம் என்ற பரிந்துரையை      நிராகரிக்க  வேண்டும்.

   மத்திய சங்க அறைகூவலை அனைத்து ஊழியர்களையும்

   திரட்டி  அமலாக்குவோம் !  


 Day long Dharna on 12-08-2016 and lunch hour demonstration – reg. 

              Letter No.-TF-1/5(F), dt-25-07-2016. 

                                      Click Here






தமிழ் மாநில பொது  மேலாளர் திருமதி  N. பூங்குழலி அவர்களை
தோழியர் ஹேமலதா   பட்டாபிராமன் அவர்கள் பொன்னாடை 
போர்த்தி கௌரவித்தார்.

Sunday, July 24, 2016


                

தோழர் சுப்பராயன் அவர்களே... மாநிலப்பொருளராக தாங்கள் 

தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு அன்பார்ந்த புரட்சி வாழ்த்துகளை 

தெரிவித்துக்கொள்கிறேன்... 

கோவையின் உங்கள் பணி இனி மாநிலம் முழுவதும் தொடரப்

போகிறது  என்பது கோவைக்கே பெருமை... 

மாநிலத்தின் முக்கிய பதவிகளில் அதாவது    key post ல் கோவை 

வருவது இதுவே முதல்முறை என்பதால் NFTE கோவையில் இனி

புது எழுச்சி கொண்டு வீர நடையும், வெற்றி நடையும், ஒற்றுமை

 பாதையில் போட்டு வர வேண்டும்...

 மாநிலச்செயலராக தஞ்சையின் இளம் சிங்கம் தோழர் நடராஜன் 

தேர்வானது மிக்க மகிழ்ச்சி...


     மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

                                        

Saturday, July 23, 2016


புதிய மாநிலச் செயலரின் முதற்பணி !

வேலூர் மாநில மாநாட்டில் புதிய மாநிலச் செயலராக பொறுப்பேற்ற
தோழர் கே.நடராஜன் அவர்கள் கும்பகோணத்தில் நடந்த SEWA BSNL கூட்டத்தில் பங்கேற்று பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 
திருவுருவ படத்திற்கு மரியாதை செய்தார்.

உடன் : SEWA BSNL தலைவர் தோழர் P.N.பெருமாள், 
மாநிலச் செயலர் தோழர் T.முத்துகிருஷ்ணன்



தமிழக முதன்மைப் பொது மேலாளர் திருமதி என்.பூங்குழலி அவர்கள்
இவ்விழாவில் பங்கேற்றார்/