Sunday, April 3, 2016

                        அபிமன்யூவின் வேதனை !

கார்ப்பரேஷன் ஆனபிறகு, NFTE சங்க  அங்கீகார காலத்தில் நமது ஊழியர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் (BSNLMRS) அறிமுகப்படுத்தப்பட்டது.

வெளிப்புற சிகிச்சைக்கு என்று (சிகிச்சை 
 பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்) 3 மாதத்திற்கு  ஒருமுறை  மருத்துவப்படி  ! (எவ்வளவு என்பதை உங்களது பழையPay Slipஐ பாருங்கள்)

உட்புற சிகிச்சைக்கு என்று  நல்ல தரமான கே.ஜி மருத்துவமனை, கேஎம்சிஎச் போன்ற தரமான மருத்துவமனைகள்.  கட்டணம் ஏதும் நம்மிடம்  வசூலிக்கப்படவில்லை.

ஆனால், அபிமன்யூவின் அங்கீகாரக் காலத்தில்
அனைத்தையும் இழந்தோம். மோசமான  ஒரிரு 
மருத்துவமனைகள், நாம் பணம் கட்டி சிகிச்சை செய்து கொள்ளவேண்டிய அவல நிலை.கால்வாசி கட்டணமே கொடுக்கப்படும். 

வழக்கமாக உறுப்பினர்கள் தங்களது குறைகளைை
தலைவர்களிடம் கூறுவார்கள், அவர்கள் தீர்த்து
வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்.
ஆனால், கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அபிமன்யூ தனக்கு கண் ஆபரேஷன் செய்ய ஒரு லட்சம் ரூபாய் செலவானதாகவும் ஆனால், ஆயிரத்திற்கும் குறைவான தொகைதான்  திருப்பி கொடுக்கப்பட்டதாகவும் புலம்பினார்.
தனது பிரச்னையையே தீர்க்க முடியாத இவர், ஊழியர்கள் பிரச்னையை எப்படி தீர்ப்பார் ?
குறைந்த பட்ச போனசாக ஏழாயிரத்தை எங்கே 
வாங்கித் தர போகிறார்.

No comments:

Post a Comment