Monday, October 12, 2015


              சீர்குலைவை அனுமதியோம் ! 

        சீர்குலைக்க அனுமதியோம் !

              கோவை மாவட்ட செயலர் தடாலடி உண்ணாவிரதம்.
AGM(Admn) அறையில் மா.செ. திடீர் உண்ணாவிரதம் துவங்கினார். 
       மேலும் விரிவான தகவலுக்கு மா.செ.அணுகவும்.
      -- முன்னாள் மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணனின்  முகநூலிலிருந்து

                           

மாவட்டச் செயலர் L.S, பொறுப்பேற்றவுடன். ஊழியர் பிரச்னைகளை 
அதிகாரிகளுடன் விவாதிக்க செல்லும்போது, முன்னாள் மாவட்டச் 
செயலரான N.ராமகிருஷ்ணனையும் நம்முடன் வருமாறு  பலமுறை 
அழைத்தோம். 

நம்மோடு வர முடியாது, "  மாவட்டச் சங்கத்திற்கு போட்டியாக  தனியாக 
 அதிகாரிகளை சந்திப்பேன், என்னை யாரும் தடுக்க முடியாது ".  என்று 
சவால் விடுத்தார்  N. ராமகிருஷ்ணன். 
  சங்க நலன் கருதி 4 மாதங்கள் பொறுமை காத்தோம். பல முன்னணி 
தோழர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றபோது அதற்கு ஒத்துழைப்பு 
நல்கினோம்.   

ஆனால், அவர் எதற்கும் ஒப்புக்கொள்ளாமல் அவரை மீண்டும் மாவட்டச்செயலர் 
ஆக்கினால்தான், ஒத்துழைப்பேன் என்று எல்லோரிடமும் கூறிவிட்டார்.

நேற்று காலை  AGM (A) அவர்களை சந்திக்க மாவட்டச் செயலர் சென்றபோது,
மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலர் பதவிக்கு மீண்டும் தான் தேர்ந்தெடுக்கப்
படாததை  இன்னும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல்  பழைய ஹோதாவில் 
குமரேசன், மற்றும் இரண்டு தோழர்களுடன்  AGM அவர்களின் அறையில் அமர்ந்து 
ஊழியர்கள் பிரச்னையை விவாதிப்பது போல பாவ்லா செய்து கொண்டிருத்தார், 
N.ராமகிருஷ்ணன்

சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு சிலருக்கு நிர்வாகம்  துணை 
போகக் கூடாது, அதை அனுமதிக்கவும் மாட்டோம்  என்று  கூறி மாவட்டச் 
செயலர் L.S.உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.

  AGM அவர்கள் , தான் முன்னாள் மாவட்டச் செயலருடன்  எந்த பிரச்னையையும் 
விவாதிக்கவில்லை என்றும் ஊழியர் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் 
என்றால் மாவட்டச் செயலரை அழைத்து வரச் சொன்னதாகவும் கூறினார்.

மாவட்ட மாநாட்டில் தோழர் L.S. பெயரை முன் மொழிந்து ஏகமனதாக 
தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துவிட்டு தற்போது போட்டியாக செல்படுவது
ஏன் ?  "  என்று ராமகிருஷ்ணனிடம் AGM முன் நேரடியாக கேள்வி கேட்டார் எல்.எஸ்.

பிரச்னை பெரியதாகும் முன் வெளியேறி விடுங்கள் என்று AGM கூறியவுடன் 
மற்ற மூவரையும் அழைத்துக் கொண்டு  ராமகிருஷ்ணன் வெளியேறினார்.

 விஷயத்தை கேள்விப்பட்ட மாவட்ட தலைவர் தோழர் A.ராபர்ட்ஸ் உடனடியாக 
ஓடோடி வந்தார். 
  
  இனி  மாவட்டச் செயலருடன் வரும் மாவட்ட நிர்வாகிகளை மட்டும் நான் 
சந்திப்பேன் என்று AGM (A)  உறுதி அளித்தார்.




 .

No comments:

Post a Comment