Tuesday, October 25, 2016

                            27-10-2016 /ஆர்ப்பாட்டம்

அனைத்து சங்கங்களின் எதிர்ப்பையும் துச்சமாக கருதி BSNL நிறுவனத்தின் டவர்களை பிரித்து தனி துணை நிறுவனமாக நிறுவ அதிவேகமாக செயல்படும் மத்திய அரசின் செயலை கண்டித்து நடைபெறும் நமது தேசிய போரம் மற்றும் போரம் அமைப்பின் அறைகூவலை ஏற்று அனைத்து கிளைகளிலும் இணைந்து ஆர்பாட்டம் நடத்த மாவட்டச் சங்கம் அனைத்து கிளைகளையும் கேட்டுக் கொள்கிறது. 


Saturday, October 22, 2016

  
  தில்லுமுல்லு   ரிலையன்ஸ் ஜியோவை 

எதிர்கொள்வோம்   !

தொலைத் தொடர்பு  துறையில் தனது  ஏகபோகத்தை உருவாக்கும் நோக்கத்தில்   வாய்ஸ் கால் இலவசம், ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி என்றெல்லாம் விளம்பரம்
செய்து வாடிக்கையாளர்களை கவர முனைந்துள்ளது முகேஷ் அம்பானியின்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.    

அந்நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனமாக   உருவானதே குறுக்கு  
வழியில்தான்.  திருபானி அம்பானி இறந்தவுடன் அவரது இரு மகன்களிடையே   
சொத்துத்  தகராறு ஏற்பட்டது. சிதம்பரம் தலையிட்டு  சமரசம் செய்து  வைத்தார். டெலிகாம் துறை அனில் அம்பானிக்கு  ஒதுக்கப்பட்டது.ஆனால் முகேஷ் அம்பானியால்   அந்த உடன்பாட்டை  அமலாக்க விருப்பமில்லை. வளம் கொளிக்கும் டெலிகாம் துறையில் நுழைய திட்டமிட்டார்.

2010ல் 4 G ஸ்பெக்ட்ரம்  ஏலம் விட்டபோது அதில் நேரடியாக பங்கு கொள்ளாமல்
தனது பினாமி மூலம் ஏலம் எடுத்தார் முகேஷ் அம்பானி..அவரது பினாமி வேறு யாருமல்ல....ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சுக்ராம் சிறை செல்ல
காரணமாக இருந்த  Himachal Futuristic Communications Limited (HFCL),மகேந்திர
நாகதாவின் மகன் அனந்த் நகதா. அந்த குடும்பமே  ஊழலில் திளைத்துள்ளது.
அனந்த நகதா IBSPL  என்ற கம்பெனியை துவக்கி,  அது  4 G  ஏலத்தில் பங்கேற்று
 22 தொலைத்தொடர்பு மாநிலங்களில் ப்ராட்பேண்ட்க்கான   லைசன்ஸ் பெற்றது. 
 சுருக்கமாக   I NFOTEL  எனும் அந்த நிறுவனம் யாரும் கேள்விப்படாத நிறுவனம். 
ரூ.2.5 கோடி மட்டுமே  முதலீடும் 14 லட்சம் மட்டுமே ஆண்டு வருமானமும் 
கொண்ட அந்த சிறு நிறுவனத்திற்கு 12,847 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அலைகற்றை ஒதுக்கப்பட்டது. அந்த நிறுவனம் கொடுத்த வங்கி உத்திரவாதம் (Bank guarantee) போர்ஜரி செய்யப்பட்டது. ஏலம் விடப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த கம்பெனியை விலைக்கு வாங்கி  ரிலையன்ஸ் ஜியோ என்று  பெயர் மாற்றினார் முகேஷ் அம்பானி. எல்லாம்  ரகசிய  ஏற்பாடுதான்.

இவ்வாறாக பொய்யிலே பிறந்த ரிலையன்ஸ் ஜியோ, பொய்யையே முதலீடாக்கி 
ஏர்டெல், வோடாபோன், ஐடியா, உள்ளிட்ட தனியார் நிறுவனங்களையும் நமது
நிறுவனத்தையும்  ஓரங்கட்டிவிட்டு தனது ஏகபோகத்தை நிலைநாட்ட இலவசம் 
எனும் ஆயுதத்தை எடுத்துள்ளது. இதில் மிகவும் கேவலமானது என்னவென்றால், 
நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவு பிரதமர் மோடியின் பெயரையும் போட்டோவையும் தனது மோசடி   விளம்பரத்திற்கு  கூச்சநாச்சமின்றி பயன்படுத்துவதாகும்.அதை மத்திய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது 
அதன் உள்நோக்கத்தை தோலுரித்து காட்டுகிறது.

இந்த மோசமான சூழலில் நமது CMD திரு.அனுபம் ஸ்ரீவத்சா அவர்கள், 
" இந்த சவாலை  எதிர்கொள்வோம் ! நமது  கட்டணங்களை சமப சந்தர்பத்திற்கு 
ஏற்றவாறு  மாற்றியமைப்போம் ! சிறந்த 4ஜீ சேவையை உறுதி செய்வோம் ! "
என்று உறுதியுடன் செயலாற்றுவது  நம்பிக்கை அளிக்கிறது        
  


Tuesday, October 18, 2016


                        வெற்றி கண்ட போராட்டம் !
 
             மாவட்டச் செயலர் தோழர் எல்.சுப்பராயன்  உண்ணாவிரதம் 

துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு

அழைப்பு விடுத்தது. காரசாரமான விவாதத்திற்கு பிறகு நாம் வைத்த நியாயமான


கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொண்ட காரணத்தால் 

உண்ணாவிரதம் 2 மணிக்கு வெற்றிகரமாக  முடித்துக் 


கொள்ளப்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் வகையில் 


பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றி.  

நல்ல தீர்வு உருவாக உதவிய மாநிலச் செயலர் 


தோழர் கே.நடராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

உடல்நலமில்லாத போதும் பிரச்னையை உடனடியாக 

தீர்க்க வழிக்காட்டிய PGM  அவர்களுக்கும் பேச்சுவார்த்தை 

நடத்திய DGM (A), AGM (A) ஆகியோருக்கும் நமது நெஞ்சுநிறை 

நன்றி.

   
Friday, October 14, 2016


    உண்ணாவிரத  போராட்டம் 

கோவை மாவட்ட நிர்வாகம் 

வெளியிட்ட  சுழல் மாற்றல்

உத்திரவில் ஏற்பட்ட குளறுபடிகளை

களையக் கோரி மாவட்டச்

செயலர் தோழர் எல்.சுப்பராயன்

அவர்களின் உண்ணாவிரத 

போராட்ட அறிவிப்பு

Monday, October 3, 2016

                  வாழ்த்துகிறோம், பணி சிறக்க !!


நமது சங்கத்தின் வழிகாட்டுதலோடு செயல்பட 
கோவை மாவட்ட   ஒப்பந்த ஊழியர் சங்கம் 
1-10-2016 அன்று ராம்நகர் தொலைபேசி நிலையத்தில்
ராம் நகர் கிளைச் செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி 
அவர்களின் முன்முயற்சியால்  துவக்கப்பட்டுள்ளது

மாநில துணைச் செயலர் தோழர் ராபர்ட்ஸ் துவக்க 
உரை ஆற்றினார். . 

அதன் தலைவராக தோழர் கருணாநிதி அவர்களும்
செயலராக தோழர் தம்புதுரை அவர்களும் தேர்ந்து
எடுக்கப்பட்டுள்ளனர்.

தோழர்களின் பணி சிறக்க மாவட்டச் சங்கம் 
வாழ்த்துகிறது. 

முழு ஒத்துழைப்பையும் நல்க உறுதி அளிக்கிறது. 


Friday, September 30, 2016

Image result for BSNL

              

BSNL completes 16 years excellent service to the people                 Congratulations to all!                              


       அக்டோபர்   ஒன்றாகிய இன்று ,   BSNL  17ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.


நமது நிறுவனம் ஓரிரு ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்காது என்று ஆருடம் கூறியவர்தான் 

BSNL completes 16 years excellent service to the people                  Congratulations to all!                              

என்று பெருமையாக தனது வலைதளத்தில் வாழ்த்து கூறுகிறார். 
அவர் வேறு யாருமல்ல....... தோழர் நம்பூதிரி.

இன்று strategic sale  எனும்  ஆபத்தை 
எதிர் நோக்கிய சூழ்நிலையிலும்,  DOTல் 
பணியாற்றி வந்த   90 சத மூத்த  ஊழியர்களின் வாழ்க்கைக்கு  பாதுகாப்பாக திகழும் பென்சனை உறுதி செய்த  அந்த மகத்தான தலைவனை நினைவு கூர்வதும், மக்கள் சேவைக்காக 
தன்னை அர்பணித்துக் கொள்ளும் நிறுவனத்தை பாதுகாக்கவும்,  சிறந்த  சேவை வழங்கவும் 
உறுதி ஏற்போம் ! 

Thursday, September 29, 2016


    1.10.2016 முதல் உயர்ந்துள்ள IDA   புள்ளி 
                           5.5 சதம்